2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சத்திரசிகிச்சைக்கென போலியாக நிதி சேகரித்த கும்பல் கைது..

A.P.Mathan   / 2012 மார்ச் 23 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாதம்பை பகுதியைச் சேர்ந்த காது கேளாத நான்கு வயது குழந்தை ஒன்றுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக எனக்கூறி சிலாபம் பகுதியில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட எட்டுப் பேரடங்கிய கும்பல் ஒன்றினை சிலாபம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்துள்ளதோடு அவர்கள் பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்துக் கொண்டு இவர்கள் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இவர்கள் நிதி சேகரிப்பதற்காக தம் வசம் மருத்துவச் சான்றிதழ்களை வைத்திருந்துள்ளதோடு, அந்தச் சான்றிதழுக்குரிய காது கேளாத சிறுமிக்கு இவர்கள் தெரிவிப்பதைப் போல பாரியளவு கோளாறு எதுவுமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இவ்வாறு சத்திரசிகிச்சைக்கான நிதி சேகரிப்பதற்கு உரிய எழுத்து மூல அனுமதியையும் பெற்றிருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X