2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

முந்தலில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                       (எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாடு  கிராம கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலத்தை முந்தல் பொலிஸார்  இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

அப்பிரதேச மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலை வழமைபோன்று கடற்றொழிலுக்காகச் சென்றபோது கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதைக் கண்டு முந்தல் பொலிஸாருக்கு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தில் ஆடைகள் எதுவும் காணப்படவில்லை. இருப்பினும் சடலத்திற்கு அருகில் துணியொன்று காணப்படுகின்றது. தலைமுடி கட்டையாக வெட்டப்பட்டுள்ளதுடன், சடலத்தின் வயிற்றுப்பகுதியில் தீக்காயங்கள் சில காணப்படுவதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X