2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும்: பி

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்களை கொண்ட  குழுவினரது அறிக்கை கிடைக்க பெற்றதன் பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்படும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
 
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"வெளிநாடுகள் கேட்டுக்கொள்வதற்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த பரிந்துரைகளை மூன்று விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளில் எதனை நடைமுறைப்படுத்துவது, இவைகளை நடைமுறைப்படுத்துவதால் இலங்கைக்கு ஏற்படும் நன்மை தீமை மற்றும் இதன் மூலம் சர்வதேசத்துடன் எவ்வகைகளில் தொடர்புகளை பேணுவது என்பனவே அந்த மூன்று விடயங்களாகும்.

இவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தததன் பின்னரே ஆணைக்குவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்" என்றார்.

இந்நிகழ்வில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • pasha Monday, 26 March 2012 03:28 PM

    நல்லிணக்க ஆணைக்குழு நிபுணர் குழு பரிந்துரைகளை ஆராய்வதற்கு ஒரு நிபுணர் குழு. இந்த நிபுணர் குழு அறிக்கை வந்தவுடன் அந்த அறிக்கை ஆராய மற்றுமொரு குழு இப்படியே காலத்தை ஓட்டலாம் என்று அரசு நினைத்திருக்கையில் ஐ நா தலையிட்டு உடனே பரிந்துரைகளை அமுல் செய்யுங்கள் என்றது. பேரின அரசாங்கத்துக்கும் அதில் தொங்கும் சிறுபான்மை நபர்களுக்கும் தாங்க முடியல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X