2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தில் அங்கவீனரான இராணுவ வீரர் காதல் திருமணம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

யுத்தத்தில் அங்கவீனரான இராணுவ வீரர் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை காதல் திருமணம் செய்துகொண்டார். 

மிஹிந்தலை வெல்லாரகம பகுதியைச் சேர்ந்த சரத் குலருவன் குதிலக (வயது 22) என்ற இராணுவ வீரருக்கே அநுராதபுரம் அங்கவீன இராணுவ வீரர்கள் பராமரிப்பு நிலையத்தில்  திருமணம் நடைபெற்றது. 

2008.11.18ஆம் திகதி கிளாலி முன்னரங்கில் கண்ணிவெடியில் சிக்குண்ட இவரது கண்கள் இரண்டும் முற்றாக பார்வை இழந்ததுடன், வலது கையும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில்  அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, எஸ்.எம்.சந்திரசேன,  பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ.ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய  உள்ளிட்ட பலர் இத்திருமண வைபவத்தில் கலந்துகொண்டு புதுமணத்தம்பதிகளை ஆசிர்வதித்தனர்.





You May Also Like

  Comments - 0

  • A B M ZAWAHIR Wednesday, 28 March 2012 09:11 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X