2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி பலி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாதம்பை, இரட்டைக்குளம் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி  மரணமடைந்ததாக  மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்னா சோபனி (வயது 20)  என்பவரே மரணமடைந்தவர் ஆவார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் வீட்டுக்கு  வந்த குறித்த கணவர், தனது மனைவியைக் கடுமையாக அடித்துத்  தாக்கியுள்ளதாகவும் இதன்போதே குறித்த பெண் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இதனைத் தொடர்ந்து குறித்த கணவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் மாதம்பைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X