2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் வெங்காயத்தில் பரவி வரும் நோய் காரணமாக உற்பத்தி பாதிப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேசத்தில் சிறிய வெங்காய செய்கையில் கடந்த சில நாட்களாக பரவி வரும் நோய் காரணமாக நூற்றுக்கணக்கான வெங்காய செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெங்காய செய்கையில் பரவி வரும் இந்நோயானது ஒரு வகை பங்கசு காரணமாக ஏற்பட்டதாகவும், இது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாய திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது கற்பிட்டி பிரதேசத்தில் ஏறத்தாழ 1100 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறிய வெங்காய செய்கை பண்ணப்பட்டு வருவதாகவும் இலங்கையில் சிறிய வெங்காய உற்பத்தியில் வடமேல் மாகாணம் முன்னிலை வகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X