2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வட மேல் மாகாண பட்டதாரிகளுக்கான பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற பரீட்சார்த்திகளை மாகாண முதலமைச்ச

Super User   / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

வட மேல் மாகாண சபையால் நடத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான போட்டி  பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளை உடனடியாக வட மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு புத்தளம் நகர சபை தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் கேட்டுள்ளார்.

வட மேல் மாகாண சபைக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்கறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அண்மையில் மாகாண சபை போட்டி பரீட்சையொன்றை நடத்தியது.

இப்போட்டி பரீட்சையில் குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகலே கூடுதலான புள்ளிகளை பெற்று ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

எனினும் வட மேல் மாகாண சபைக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் நகர சபை தலைவர் பாயிஸ் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலத்துமாறு ஜனாதிபதி வட மேல் மாகாண முதலமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாகாண முதலமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தவதாகவும் கூறினார்.

எனவே, வட மேல் மாகாண சபை பட்டதாரிகளுக்கு நடத்திய போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்ற தமிழ் மொழி மூல பட்டதாரிகள் உடனடியாக மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் புத்தளம் நகர சபைத் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X