2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முந்தலில் வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு தியட்ட பியச திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைப்பெற்றது. புளிச்சாக்குளம் மற்றும் அங்குனுவில ஆகிய கிராமங்களிலுள்ள வறிய குடும்பத்தினருக்கு  தலா ஒரு வீதம் இரு வீடுகள் கையளிக்கப்பட்டன.

இவ்வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதுடன் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இவ்வாண்டு கையளிக்கப்படும் 5வதும் 6வதும் வீடுகள் இதுவாகும்.சமூர்த்தி திட்டத்தினூடாக இதுவரை முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குள் 61 வீடுகள் வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

சுமார் 4 இலட்சம் வரை பெறுமதியான இவ் வீடுகளுக்கு சமூர்த்தியினூடாக 1 இலட்சமும், ஏனைய சமூர்த்தி பயனாளிகளின் பங்களிப்பும் பெறுமளவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் என்டனி, ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.சரீப்டீன் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X