2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் விசேட பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று வியாழக்கிழமை நாட்டப்பட்டது.

இந்த டெங்கு காய்ச்சல் விசேட சிகிச்சைபிரிவு சுகாதார அமைச்சின் 13 இலட்சம் ரூபா உத்தேச செலவில் அமைக்கப்படவுள்ளது. ஒரே சமயத்தில் 20 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் கொண்டதாக இந்த பிரிவு அமையவுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, முன்னாள் மேயர் ஹேர்மன் குரேரா, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X