2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரை கண்டு தப்பியோடிய நபர் கிணற்றில் வீழ்ந்து பலி

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

பதவியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் சூது விளையாடிக்கொண்டிருந்த குழுவொன்றிலிருந்தாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸ் ஜீப்வண்டியை கண்டு தப்பியோடியபோது பாதுகாப்பற்ற விவசாயக் கிணறு ஒன்றில் வீழ்ந்து நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக பதவியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு வேளையில் சூது விளையாடிக்கொண்டிருந்த குழு பொலிஸாரின் ஜீப்வண்டி வருவதைக்கண்டு பயத்தில் கலைந்து நாலா பக்கங்களிலும் சிதறி ஓடியுள்ளனர்.

இவ்வாறு ஓடியவர்களுள் ஒருவரே வயல் வெளியில் அமைந்திருந்த விவசாயக்கிணறு ஒன்றில் தவறுதலாக வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X