2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ், எஸ்.எம். மும்தாஜ்)

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் பிரச்சினை காரணமாக ஆசிரியை ஒருவர் பெற்றோரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தை சேர்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இன்று காலை முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் அதிபரும், அலுவலக ஊழியரும், முகாமைத்துவ உதவியாளரும் மாத்திரமே இன்று கடமையில் ஈடுப்பட்டுள்ளதுடன் ஏனைய 25 ஆசிரியர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக்குள் நேற்று புதன்கிழமை சென்ற பெற்றோர் தரம் 1 இல்; கல்வி கற்கும் தனது மகனுக்கும் மற்றுமொரு மாணவனுக்குமிடையாலான பிரச்சினை தொடர்பாக குறித்த மாணவனின் தாயான ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதுடன் அவரை தாக்கியும் உள்ளனர்.

இது தொடர்பில் குறித்த ஆசிரியை புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவத்தில் ஆசிரியை தாக்கப்பட்டமையினை கண்டித்தும், அவருக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென கோரியும் இன்று ஆசிரியர்கள் சுகவீன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X