2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராபுரம் லொறி – வான் விபத்தில் சிக்கிய சாரதியும் உயிரிழந்தார்

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

கடந்த வெள்ளிக்கிழமை அநுராதபுரம் றம்பாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய லொறியின் சாரதி படுகாயமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று) சனிக்கிழமை மரணமடைந்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். 

நாச்சியாதீவு பகுதியைச் சேர்ந்த சுபைர் நளீம் (வயது 29) என்ற இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் றம்பாவை பொலிஸ் சோதனை சாவடியினருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எல்ப் ரக லொறி ஒன்றின் மீது பின்னால் வந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வான் ஒன்று மோதியுள்ளது. இதில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பணிப்பாளர்களில் ஒருவரான நூராணியா ஹசன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் லொறி சாரதி உட்பட்ட ஆறு பேர் காயமடைந்தனர்.

கடுமையான காயங்களுக்குட்பட்ட லொறி சாரதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X