2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குண்டு என இனம் காணப்படும் குண்டொன்று மீட்பு

Super User   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ், எஸ்.எம்.மும்தாஜ்)

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய பிரதேசத்தில் மோட்டார் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குண்டு என இனம் காணப்படும் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மங்கள எளிய தெற்கு மரிச்சிக்கட்டி பிரதேசத்திலுள்ள நீண்ட காலம் செய்கை பண்ணப்படாதிருந்த நெல் வயலிலுள்ள வரம்பை  தோண்டிக் கொண்டிருந்த போது,   சந்தேகத்திற்குரிய பொருளொன்று காணப்பட்டுள்ளது. 

இது தொடர்டபாக முந்தல்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. குறித்த பொருளை பரிசோதித்த பொலிஸார் மோட்டார் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குண்டு என  இனங்கண்டுள்ளனர்.  குண்டின் வகை மற்றும் இலக்கம் போன்ற  விடயங்கள்  அடையாளம்  காணமுடியாதவாறு துருப்பிடித்துள்ளது.

குறித்த குண்டு செயலிழக்கப்பட்டதா அல்லது செயலில் உள்ளதா என்று பரிசோதிக்க புத்தளம் இராணுவ குண்டு செயலிழப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X