2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளம் கடற்கரையில் சடலம் மீட்பு

Super User   / 2012 மே 04 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் கடற்கரையோரத்தில் ஆடையாளம் காணப்படாத ஆணின்  சடலமொன்றினை புத்தளம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்டுள்ளனர்.

புத்தளம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் 9ஆம் வட்டார கடற்கரையோரத்திலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தினை கண்ட பொதுமக்கள் இதுபற்றி புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சுமார் 45 - 50 வயதுக்கு இடைப்பட்டவரான உயிரிழந்தவர் பற்றிய தகவல் இதுவரை பெறப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X