2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

குளவிகளின் அட்டகாசத்தால் சிகிரியாவுக்கான பிரதான பாதை தற்காலிகமாக மூடப்பட்டது

Menaka Mookandi   / 2012 மே 04 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


சீகிரியாவை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகள் பலரை  குளவிகள் தாக்கியதை அடுத்து சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் சீகிரியாவிலுள்ள சிங்கப் பாதப் பகுதியில் வைத்தே உல்லாசப் பயணிகள் 30 பேர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியர்  ஒருவர் உட்பட மேலும் சிலர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்தே சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X