2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

விசாரணையை தாமதப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் பணிநீக்கம்

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது பணியை அலட்சியம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரை  பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் இன்று தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கொன்றின் முறைப்பாட்டு விசாரணையை இவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாகவும் சந்தேக நபர்களை கைதுசெய்யும் முயற்சியை தவிர்த்துக்கொண்டதாகவும் இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட  தரப்பினர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் இவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாக அநுராதபுரத்தின் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார். இது தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை விரைவில் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். (புஷ்பகுமார ஜயரட்ன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X