2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

உலக மலேரியா தினத்தினை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகள்

Super User   / 2012 மே 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


உலக மலேரியா தினத்தினை முன்னிட்டு இன்று புதன்கிழமை புத்தளத்தில் கருத்தரங்கும், ஊர்வலமும் இடம்பெற்றது. '2015ம் ஆண்டு மலேரியாவினை இலங்கையில் இல்லாதொழிப்போம்' எனும் கருப்பொருளில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடமேல் மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வின் கருத்தரங்கு புத்தளம் தள வைத்தியசாலையில் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து புத்தளம் மலேரியா தடுப்பு அலுவலகம் வரை மக்களினை விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட சுகாதார பணிப்பாளர் யு.எஸ்.பி. ரணசிங்க, மலேரியா தடுப்பு பிரிவு பணிப்பாளர் டி.ஏ.ஆர். பிரேமசிறி, வைத்திய அத்தியட்சகர் எஸ்.நகுலநாதன் முப்படை அதிகாரிகள், சுகாதார தினைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X