2025 மே 24, சனிக்கிழமை

வட மேல் மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு

Super User   / 2012 மே 15 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் முந்தல், உடப்பு மற்றும் ஆண்டிமுனை பாடசாலைகளுக்கு வட மேல் மாகாண சபையினால் ஒரு கோடி எழுபது இலட்சம் ரூபா செலவில் புதிய நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள், வாசிகசாலை மற்றும்  விஞ்ஞான ஆய்வு கூடம் ஆகியவற்றினை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தiமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வி அமைச்சருமான அதுல விஜயசிங்கவினால் இக்கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

இதற்கமைய முந்தல் தழிழ் வித்தியாலயத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன், 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு கூடத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இது போன்று உடப்பு தமிழ் மஹா வித்தியாலயத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆண்டிமுனை தமிழ் மஹா வித்தியாலயத்தில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறை கட்டிடமும் 35 இலட்சம் பெறுமதியான விஞ்ஞான ஆய்வு கூடமும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வட மேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த, வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான மாயாதுக்க சிந்தக, எம்.ரியாஸ், புத்தளம் நகர சபை ;தலைவர் கே.ஏ. பாயிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X