2025 மே 24, சனிக்கிழமை

மாரவில மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 மே 18 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜூட் சமந்த)


மாரவில மாவட்ட நீதிமன்றின் மேலதிக நீதவான் சந்தன கலாசூரியின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்படி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த 16ஆம் திகதி மேற்படி மேலதிக நீதவானின் வீட்டின் மீது இனந்தெரியாத நபரொருவர் கைக்குண்டொன்றை வீசி தாக்குதல் நடத்தியிருந்தார். இருப்பினும் இந்த தாக்குதலால் எவருக்கும் சேதம் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாரும் இரகசிய பொலிஸாரும் தனித்தனியே விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பெற்றுக்கொடுக்க வேண்டிய பாதுகாப்பை நீதிமன்றுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X