2025 மே 24, சனிக்கிழமை

அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது: அமைச்சர் ஹக்கீம்

Kogilavani   / 2012 மே 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)
அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் தெரிய வருவதாக முஸ்லின் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்கவேண்டாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்று வெகு விரைவில் பெற்றுக்கொடுப்பதாகவும் வாக்களித்துள்ளார் எனவும் அமைச்சர் ஹீக்கீம் தெரிவித்தார்.

அநுராதபுரம் சீ.ரீ.சீ.மண்டபத்தில் நேற்று மாலை  நடைபெற்ற கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் இரண்டாம் நிலை பெரிய கட்சி நாமே. எம்மை அரசாங்கத்திலிருந்து பிரித்து வேடிக்கைபார்க்க சிலர் முற்படுகின்றனர். எனினும் கண்டதற்கெல்லாம் காவடி ஆடும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல.

எம்முடனிருந்து பிரிந்து சென்ற சிலர் முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்த பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். சில பிரதேச எல்லைகளுக்கே போகமுடியாத நிலை ஒரு காலத்தில் எமக்கு இருந்தது. இவ்வாறான பல சவால்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாம் 50 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கியுள்ளோம்.

வடமத்திய மாகாண சபைத்தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டியுள்ளது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்புரிமையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாம் கலந்துரையாடல்களை நடத்தி உறுப்பினர்களையும் மட்சி கிளைகளையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.   

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரான உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், பா.ம.உறுப்பினர் பாருக், வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹமட் உட்பட  கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • rezad Saturday, 19 May 2012 02:54 PM

    மீண்டும் கட்சி தாவ இப்போதே ஆயத்தமோ...?

    Reply : 0       0

    THAGHA Saturday, 19 May 2012 03:10 PM

    என்னதான் நடக்குதோ தெரியல....

    Reply : 0       0

    Jesminimara Sunday, 20 May 2012 02:01 AM

    தலைவரும் தவிசாளரும் எந்தக் கட்சிக்கு தமது வாசிக்கு போக விரும்புகிறார்களோ... அப்பாவி சோனகர்களும் அவர்களுக்கு
    பின்னால் போகவேண்டும்...

    Reply : 0       0

    Jesminimara Sunday, 20 May 2012 02:04 AM

    மொத்த வியாபாரிகள்...

    Reply : 0       0

    Jesminimara Sunday, 20 May 2012 02:06 AM

    இவர்கள் பல்டி அடிக்கும் போதெல்லாம் அப்பாவி மக்களும் பல்டி அடிக்கவேண்டும்... இதுதான் எமது தலைவிதி...

    Reply : 0       0

    ishaq Sunday, 20 May 2012 06:24 AM

    சமூகத்தின் நலனுக்காக பெல்டி அடிப்பதில் ஒன்றும் தவறு இல்லை...

    Reply : 0       0

    Rasmi Sunday, 20 May 2012 06:36 AM

    தலைவர் அடிக்கடி நகைச்சுவை சொல்லுவது எனக்கு பிடிக்கும். ஏன் என்றால் அவருக்கே தெரியாது என்ன பேசுகிறார் என்று.

    Reply : 0       0

    Atheek Sunday, 20 May 2012 06:52 AM

    தலைவர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுடன் இணைந்து கேட்பதில்லை என்று முடிவெடுத்திட்டார் போல. அறிக்கை வித்தியாசமா இருக்கு. கட்சிக்கு சமூகத்தில் உள்ள மதிப்பை வைத்து தாங்கள் சொல்வதையெல்லாம் மக்கள் கேட்பார்கள் என்ற நினைப்புத்தான் இவர்கள் நினைத்த நேரத்தில் அவர்களுக்கு சாதகமாக கருத்துச் செல்வதன் காரணம்.

    Reply : 0       0

    kcm.ashhar Sunday, 20 May 2012 08:38 AM

    அரசியல் என்பது வேதமல்ல.

    Reply : 0       0

    kcm.ashhar Sunday, 20 May 2012 08:42 AM

    சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறலாம் தப்பில்லை.

    Reply : 0       0

    jesmin Sunday, 20 May 2012 09:04 AM

    மிஸ்டர் ரஸ்மி தலைவர் மாத்திரமல்ல, தவிசாளர் பேசும்போதும் அழகாக இருக்கும் பெசி முடிந்தபின்னர் அவர் என்ன பேசினர் என்பது கேட்டுக்கொன்டிருந்த மக்களுக்கும் புரிந்திருக்காது, தவிசாளருக்கும் ஞாபகம் இருக்காது

    Reply : 0       0

    Rasmi Sunday, 20 May 2012 10:14 AM

    எல்லாமே காமெடி என்றாகிவிட்டது .. என்ன செய்வது ..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X