2025 மே 24, சனிக்கிழமை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜன்ட் கைது

Super User   / 2012 மே 23 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ், ஜூட்  சமந்த)

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூதாட்ட கும்பல் ஒன்றிடமிருந்து 3,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான பொலிஸ் சார்ஜண்ட் உட்பட வென்னப்புவ பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கம்மல் எனும் பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினைக் கைது செய்து மாராவில நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த கும்பலுக்கு தொடர்ந்து தொந்தரவுகளின்றி சூதாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனில் தனக்கு 3,000 ரூபாய் வீதம் தரப்பட வேண்டும் என சந்ததேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று மாலை இவ்வாறு 3,000 ரூபாவினை குறித்த கும்பலிடமிருந்து பெறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜண்ட் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X