2025 மே 24, சனிக்கிழமை

இந்திய பிரஜைகள் இருவர் புத்தளத்தில் கைது

Menaka Mookandi   / 2012 மே 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

விசா அனுமதியின்றி தங்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் புத்தளம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  புத்தளம், தில்லையடி, அல்மினாபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இவ்விரு இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் தென்னிந்திய காரைக்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரிடமும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான வீசா இருக்கவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார், இவ்விருவரும் தென்னிந்திய காரைக்குடியிலிருந்து இராமேஸ்வரம் கடல் வழியாக மன்னார் வந்து அங்கிருந்து புத்தளம் வந்திருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தொழில் ஒன்றைத் தேடியே இவர்கள் இங்கு வந்து தங்கியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X