2025 மே 24, சனிக்கிழமை

மஹாகும்புக்கடவல பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூவர் கைது

A.P.Mathan   / 2012 ஜூன் 04 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

மஹாகும்புக்கடவல பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் மூவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாகும்புக்கடவல பொலிஸ் சாவடிக்கு கிடைத்த தகவலின் பேரில்  மஹாகும்புக்கடவல ஆண்டிகம கல்குளிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்ததாக  கூறப்படும் மூவரை சந்தேகத்தின் பேரில் மஹாகும்புக்கடவல பொலிஸ் சாவடியைச் சேர்ந்த பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். தோண்டப்பட்டுக் கொண்டிருந்த குழியில் காணப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X