2025 மே 24, சனிக்கிழமை

வடமத்திய மாகாண சபையை கலைப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு

Super User   / 2012 ஜூன் 06 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாண சபையை அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் கலைப்பதற்கு அம்மாகாண முதலமைச்சருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை  வடமத்திய மாகாணத்தின் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.

வடமத்திய மாகாண சபையை பதவிக்காலம்முடிவடைவதற்கு முன் கலைப்பதற்கு எதிராக அச்சபையின் ஐ.தே.க. உறுப்பினரான அனில் ரத்னாயக்க மனுத்தாக்கல் செய்ததையடுத்து அச்சபையை கலைப்பதற்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இம்மனுவை விசாரிப்பதற்கான அதிகாரம் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிபதிகள் நிசங்க பந்துல கருணாரட்ன மற்றும் சரத் காமினி எதிரிசிங்க ஆகியோர் தெரிவித்து, இம்மனுவை நிராகரித்தனர்.  (LD)






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X