2025 மே 24, சனிக்கிழமை

இறாலில் பரவும் வெண்புள்ளி நோயால் இறால் பண்ணையாளர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 07 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


தற்போது இறால் பண்ணைகளில் பரவிவரும் வெண்புள்ளி நோய் மற்றும் உற்பத்திச் செலவீனங்கள் அதிகரிப்பதினால் இறால் பண்ணையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பண்ணையாளர்கள் இறால் வளர்ப்பினை கைவிட்டுள்ளதாகவும் புத்தளத்திலுள்ள நாரா நிறுவனத்ததின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இறால் பண்ணைகளில் 140 தொடக்கம் 155 நாட்கள் வரை வளர்க்கப்பட்ட இறால் வகைகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன், ஜப்பான் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

1980 களின் பின்னர் புத்தளத்தில் பெருமளவிலான இறால் வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன், அதன் மூலம் இறால் வளர்ப்பாளர்கள் அதிக வருமானத்தினையும் பெற்று வந்ததாகவும் அவர் கூறினார்.

திட்டமிடாத வகையில் அமைக்கப்பட்ட இறால் பண்ணைகள், குறைவான பராமரிப்பு, காலநிலை மாற்றம் ஆகியன இறால் வளர்ப்பில் நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததென உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X