2025 மே 23, வெள்ளிக்கிழமை

புளிச்சாக்குளம் கிராமத்தில் மட்பாண்ட உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்

Super User   / 2012 ஜூலை 30 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளிச்சாக்குளம் கிராமத்தில் மட்பாண்ட உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக புளிச்சாக்குளம் மட்பாண்ட உற்பத்தியாளர் சங்க தலைவர் எஸ். சமந்த ஆனந்த தெரிவித்தார்.

இக்கிராமத்தில் சுமார் 25 மட்பாண்ட உற்பத்திசாலைகள் காணப்படுவதுடன் இதன் மூலம் சுமார் 100 குடும்பங்கள் வரை நேரடி பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் மட்பாண்டங்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும் ஆனால் போதிய நிதி வசதியின்மையால் கேள்விக்கமைய தங்களினால் உற்பத்திகளினை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு பிரதான மூலப்பொருளான களிமண் கொண்டு வர அனுமதி கிடைப்பதுடன், ஏதாவது நிதி நிறுவனங்களின் மூலம் கடன் உதவி கிடைக்குமாயின் சிறந்த முறையில் உற்பத்தியினை மேற்கொள்ளலாம் எனவும் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

கோடை காலங்களில் மாதாந்தம் 25 இலட்சத்துக்கு குறையாதளவு வருமானம் புளிச்சாக்குள கிராமத்திற்கு கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X