2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய கார்

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


கிளிநொச்சி நாச்சிக்குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மது தமீம் முஹம்மது இர்ஷாத் என்பவர் சிறிய ரக புதிய மோட்டார் கார் ஒன்றை தயாரித்துள்ளர். இவர் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தில்லையடி உமராபாத் முதலாம் குறுக்குத்தெருவில் வசித்து வருகின்றார்.

கார் தயாரித்தமை குறித்து இவர் கூறுகையில்,

"நான் சிறு வயது முதல் கார் ஒன்றை செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்ந்து வந்தேன். நான் 10ஆம் தரம் வரை மட்டுமே கல்வி கற்றுளளேன். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டதனால் கல்வியை மேலும் தொடர முடியாமல் போனது.

கடந்த 15 வருடங்களாக மோட்டார் சைக்கிள் திருத்துவதனை தொழிலாக செய்து வரும் நான், கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் மோட்டார் கார் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியை மோற்கொண்டேன். இம்மோட்டார் காரினை தயாரிக்கும் இந்த கன்னி முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் எனது குடும்பமும், நண்பர்களும் கார் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை சலுகை அடிப்படையில் பெற்றுக் கொடுத்தனர்.

அவற்றை தவிர மேலும் ஒரு இலட்சம் ரூபா பணம் இதற்கு செலவாகியுள்ளது. இந்த கார் தயாரிப்புக்கு 150சி.சி.  என்ஜின் ஒன்றை பொருத்தியிருக்கிறேன். இந்த கார் ஒரு லீற்றர் பெற்றோரில்  15 கிலோ மீற்றர் தூரம் இயங்கக்கூடியது.

நான் இந்தக் காரை தயாரிப்பதற்கு வாரத்தில் ஒரு நாட்களையே ஒதுக்கியிருந்தேன். அதற்காக இந்த காரியை முழமையாக தயாரித்து முடிப்பதற்கு எனக்கு 10 மாதங்கள் தேவைப்பட்டன. முழுநேரத்தையும் ஒதுக்கினால் 3 மாதங்களில் ஒரு காரினை தயாரிக்க முடியும்.

நான் இந்தக் காரினை விற்பனை நோக்கத்திற்காக தயாரிக்கவில்லை. எனது இலட்சியம் நிறைவெற்றப்படுவதற்காகவே இதனை தயாரித்துள்ளேன். இந்த சாதனை முயற்சிக்கு அரசாங்கம் எதுவும் கொடுக்காவிட்டாலும், காரினை வீதியில் செலுத்துவதற்கான அனுமதியை மட்டும் கொடுத்தால் போதும்.

மிகவும் கஷ்டப்பட்டு தயாரத்த மோட்டார் காரை அனுமதியில்லாததால் இன்று வீதியில் செலுத்த முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் உள்ளாகியிருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்திற்கே பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X