2025 மே 23, வெள்ளிக்கிழமை

கினியமகுளத்தில் நீர் வற்றியுள்ளதால் மக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம், பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கினியமகுளத்தில் வரட்சி காரணமாக நீர் வற்றியுள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சுமார் 118 ஏக்கர் பரப்பளவுடைய இக்குளம் பல வருடங்களாக புனரமைக்கப்படாதுள்ளது. மழை வீழ்ச்சியான காலப்பகுதியில் இக்குளத்தில் வந்துசேரும் நிரம்பி வழிகின்றதெனவும் இதனால் நீர் வீணாக வெளியேறி விடுகின்றதெனவும் கினியம பிரதேச அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு இக்குளம் புனரமைக்கப்படவிருந்தபோதிலும், இறுதித்தருணத்தில் கைவிடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X