2025 மே 23, வெள்ளிக்கிழமை

வென்னப்புவவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டிருப்பு காலவத்தை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இரகசியமான முறையில் நடாத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் விஷேட குற்ற ஒழிப்பு பிரிவினரால் இன்று காலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து சோடா பெரல்களை நிலத்தின் கீழ் புதைத்து குழாய் மூலமாக கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை இவ்வாறு புதைக்கப்பட்ட பன்னிரெண்டு பெரல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கு உபயோகப்படுத்தப்படும் உபகரணங்கள் பலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பொருட்களையும் இன்று மாலை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X