2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாலாவி பிரதேசத்திலுள்ள விமான நிலையத்தை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான்)

புத்தளம், பாலாவி பிரதேசத்திலுள்ள விமான நிலையம் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு உள்நாட்டு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளதாகவும் இதன்மூலம் புத்தளம் மாவட்டத்தில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து மாவட்ட மக்களின் வருமானம் அதிகரிக்கும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

புத்தளம், பாலாவி பிரதேசத்தில் விமானப்படை முகாமிற்குள் காணப்படும் குறித்த விமான நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் முடிவுற்ற பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

பாலாவி, விமானப்படை முகாமிற்குள் இன்று காலை நடைபெற்ற விமான நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டத்தில் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உயரதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X