2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாவட்டமடுகுள புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம், பாவட்டமடுகுள புனர்நிர்மாண பணிகள் சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் பிரதேசசபையின் உபதலைவர் நிமல் பமுனு ஆராய்ச்சி, விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன,

'தற்போது நாட்டில் நிலவும் வறட்சியை காரணம் காட்டி எவரும் அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. எவர் ஆட்சியில் இருந்தாலும் இயற்கையுடன் போராடமுடியாது. பொதுவாக ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மழை வீழ்ச்சி கிடைப்பது இல்லை.

நாட்டில் தற்போது குளங்கரள புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் மழை நீரை  அதிகமாகச் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X