2025 மே 23, வெள்ளிக்கிழமை

'வடமத்திய மாகாண சபையை ஐ.தே.க. கைப்பற்றினால் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு''

Super User   / 2012 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                                                   
                                                                                               (யொஹான் பெரேரா)

வடமத்திய மாகாண சபைத் தேர்தலில்  ஐ.தே.க. வெற்றிபெற்றால் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு வருடத்தில் தீர்வு காணப்படும் என ஐ.தே.க. இன்று தெரிவித்தது.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.தே.க. தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா இது தொடர்பாக மேலும் கூறுகையில், வடமேல் மாகாண சபையில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்திடம் மாகாண நிர்வாகம் விட்டுவிடாது. மாகாண சபையில் இதற்காக நாம் விசேட பிரிவொன்றை ஏற்படுத்துவோம்' என்றார்.

சில வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸவின் ஐ.தே.க. அராங்கத்தினால் இவ்வாறான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதையும் ஜயவிக்கிரம பெரேரா சுட்டிக்காட்டினார்.

100 அடி ஆழத்திலிருந்து நவீன தொழில்நுட்பங்கள் குழாய் கிணறு மூலம் தண்ணீரை பெற முடியும்.  இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் இதற்கான செலவில் இதற்கான உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன றுகுணு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அனுர சொய்ஸா ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)





You May Also Like

  Comments - 0

  • Ponraj Sunday, 19 August 2012 11:51 PM

    மஹாவலி மேலதிக நீரை, பொல்கொல்ல ஊடாக வழங்க வேண்டும்.

    -பொன்ராஜ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X