2025 மே 23, வெள்ளிக்கிழமை

நீதவான் மீது மனித மல வீச்சு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் மேல் நீதிமன்றத்தின் கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து  மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவைப் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.   இது தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கூண்டுக் கதவை திறந்தபோது வெளியே வந்த குறித்த நபர், தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த மேல் நீதமன்ற நீதவான் மலனி குணரட்ன மீது பொதி ஒன்றை வீசினார். இருப்பினும் அவர் வீசிய பொதி  இலக்குத் தவறி சுவரில் போய் வீழ்ந்தது. இந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்தபோது  அதில் மனித மலக்கழிவு காணப்பட்டது. (அகுஸ்தின் பெர்னாண்டோ)

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Wednesday, 22 August 2012 12:48 PM

    என்ன பொலிஸ் பாதுகாப்போ?

    Reply : 0       0

    jesmin Wednesday, 22 August 2012 05:15 PM

    இந்த நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்புள்ளது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X