2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் திறப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் மதவாக்குளம் கிராமத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வடமேல் மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர்  அசோக வடிவமங்காவவினால் திறந்து வைக்கப்பட்டது.
வடமேல் மாகாண சபையின் சுமார் 150 இலட்சம் ரூபா செலவில் இந் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ் நிலையத்துக்கு மதவாக்குளம் கிராமத்திலிருந்தே சில ஊழியர்களினை வேலைக்கு அமர்த்தவும், நிரந்தர முஸ்லிம் மருத்துவரினை நியமிக்கவும் தான் நடவடிக்கை எடுப்பதாக வடமேல் மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக வடிவமங்காவ இதன்போது தெரிவித்ததார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட வைத்திய அத்தியட்சகர், ஆனமடுவ, நவகத்தேகம, வணாத்தவில்லுவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • #safirdn Saturday, 25 August 2012 08:22 AM

    wel done..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X