2025 மே 23, வெள்ளிக்கிழமை

முன்னேஸ்வரம் காளி கோயிலில் திட்டமிட்டபடி மிருக பலி பூஜை இடம்பெறும்; நிர்வாகம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

எந்தவித எதிர்ப்புக்களோ அல்லது தடைகளோ ஏற்படுத்தப்பட்ட போதிலும் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலின் வருடாந்த மிருக பலி பூஜை திட்டமிட்டபடி வரும் சனிக்கிழமை இடம்பெறும் என அக்கோவிலின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நேற்று அக்கோவிலின் முன்னால் மிருக பலி பூஜைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் சத்தியாக்கிரக் போராட்டம் ஒன்றை நடத்தியது நிலையிலேயே கோயில் நிர்வாகத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்புக்களுக்காக எமது சமய விடயங்களை நாம் கைவிடப்போவதில்லை. இவ்வாறான எதிர்ப்புக்களினால் எமது சமய விடயங்களை முன்னெடுப்பதில் எமக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எமது இந்த சமய பணியை தடையின்றி முன்னெடுப்பதற்கு வசதி செய்து தருமாறு நாம் ஜனாதிபதி உட்பட பாதுகாப்புச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். எமது இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நேற்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் வெளியிலிருந்து வந்தே ஈடுபட்டனர். அவர்கள் இனவாதக் கோஷங்களை எழுப்பினர். எவ்வாறாயினும் நாம் சட்டப்படியே இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் என நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X