2025 மே 23, வெள்ளிக்கிழமை

களுவரகஸ்வெவ பிரதேசசபைத் தலைவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க,ஜுட் சமந்த)

களுவரகஸ்வெவ பிரதேசசபைத் தலைவர் (ஐ.ம.சு.கூ.) பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். களுவரகஸ்வெவ பகுதியில் 16ஆவது மைல் வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நபரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த பிரதேசசபைத் தலைவர் மதுபோதையில் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

புத்தளம் பிரதேச செயலக அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

பிரதேசசபைத் தலைவரும் மோட்டார் சைக்கிள் பயணித்த நபரும் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாக களுவரகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் இருவரும் தபோவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசசபைத் தலைவருக்கு எதிராக பொலிஸில் மேலும் 5 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு முறைப்பாடு கருவரகஸ்வெவ பொலிஸிலும் 4  முறைப்பாடுகள் சாலியவெவ பொலிஸிலும் செய்யப்பட்டுள்ளன. வெறொரு அலுவலக ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றஞ்சாட்டி செய்யப்பட்ட முறைப்பாடும் அடங்குகின்றது.

பிரதேசசபைத் தலைவர் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X