2025 மே 23, வெள்ளிக்கிழமை

'புத்தளத்தில் மேற்கொள்ளப்படும் முற்போக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு த

Super User   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளத்தில் தற்போது முற்போக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த புத்தளம் நகர சபை தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், இதற்கு உறுப்பினர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புத்தளம் நகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று வியாழக்கிழமை நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் தலமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக நகர சபை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கடந்த காலங்களை விடவும் தற்போது புத்தளத்தில் பாரிய மற்றங்கள் ஏற்பட்டுள்ளமை அறிந்த விடயமே. இன்று புத்தளத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நiபெற்று கொண்டிருக்கின்றன. தற்போது கடும் வரட்சி காணப்படுவதால் புத்தளம் நெடுங்குளம் புனரமைக்கப்படுகிறது. இதன் மூலம் புத்தளத்திலுள்ள மக்களின் நீர் தேவைகளை மிகவும் இலகுவாக பெற்றுக் கொள்வார்கள்.

அத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கென 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதில் 3 மில்லியன் சபையின் நிதியிலிருந்தும் ஏனையவை அரச நிதியிலிருந்தும் பெறப்படவுள்ளது.

இது மட்டுமன்றி புத்தளம் நகர சபைக்குற்பட்ட பிரதேசங்களில் நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை அடையாளங் காணப்பட்டு துப்பரவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இம்மூன்று திட்டங்களும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது" என்றார்.

இன்றை சபை நடவடிக்கைகளின் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டன. இந்த அமர்வில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X