2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாக முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபைக்குற்பட்ட புத்தளம் மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் அதனால் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாவும் சுட்டிக்காட்டிய புத்தளம் நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.ஓ.அலிகான், இது குறித்து நகர சபைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தளம் நகர சபையினால் எமது பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்ற அதேநேரம் இனந்தெரியாத சிலர் மாடு, கோழி இறைச்சிகளின் கழிவுகளை புத்தளம் மாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் கொண்டுவந்து கொட்டுகின்றனர்.

இதனால் பிரதேச மக்களுக்கு மாத்திரமின்றி, கோயிலுக்கு வழிபாடுகளுக்காக வரும் தமிழ் பக்தர்களுக்கும் பல அசௌகரியங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே இது விடயத்தில் நகரசபைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறித்த வேண்டுகொளை ஏற்றுக்கொண்டுள்ள புத்தளம் நகரசபைத் தலைவர்  கழிவுகள் கொட்டப்படுவதாகக் கூறப்படும் உரிய பகுதிகளுக்குச் சென்று இறைச்சிக்  கழிவுகளை கொட்டுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைப் பணித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X