2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக மஹவெவவில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த,
அப்துல்லாஹ்)

நாத்தாண்டியா பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை பகல் மஹவெவ பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மஹவெவ பிரதேச செயலகம் அமைந்துள்ள சிலாபம் கொழும்பு பிரதாக வீதியில் இடம்பெற்றதன் காரணமாக அவ்வழியின் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் தடை பட்டது.
 
பஹல வலஹாபிட்டி, மரந்த மற்றும் ஹத்தினிய போன்ற பிரதேசங்களில் இவ்வாறான மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக அப்பிரதேசங்களில் சுற்றாடலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பிரதேசத்தில் மணல் அகழ்வுக்காக அனுமதிப்பத்திரம் கோரியுள்ள ஒருவருக்கு எதிராக பிரதேசவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்து முறைப்பாடு செய்ததையடுத்து அது பற்றி விசாரணை செய்வதற்காக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் அகழ்வுப் பிரிவின் அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை மஹவௌ பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போதே இந்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது. தமது பிரதேசங்களில் வருங்காலங்களில் மணல் அகழ்வுகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதையடுத்து அங்கு வந்த மாரவில பொலிஸார், சிலாபம் -  கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தினை வழமை நிலைக்கு கொண்டு வந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X