2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தில்லையடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை

Super User   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

"இந்த தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் வருகை தந்த ஆயததாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேர கடமையில் இருந்த ஊழியரிடம் கையிலுள்ள பணத்தைக் கேட்டுள்ளனர்.

குறித்த ஊழியர் பணத்தை கொடுக்க மறுத்த போது அவரை தாக்கியுள்ளனர். இதன்போது அங்கு இருந்த மற்றுமொறு ஊழியர் அங்கு வந்த ஆயததாரிகளை தாக்கியுள்ளனர்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். அங்கு வந்த ஆயுததாரிகளில் ஒருவர் டி – 56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து ஊழியர்களிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்".

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .