2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முன்னேஸ்வரம் மிருகபலி பூஜையை நிறுத்தும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை: நீதவான்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலி பூஜையை நிறுத்தக்கோரி, பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு, சிலாபம் மாவட்ட நீதிமன்றினால் இன்று செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டது.

அத்துடன், மேற்படி மிருகபலி பூஜையை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என சிலாபம் மாவட்ட நீதவான் ஜகத் ஏ கஹ்ந்தகமகே தெரிவித்துள்ளார்.

'துன்ஹலே ஜாதக வியாபாரய' எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஓமாரே கஸ்ஸப தேரரால், காளி கோயில் மிருகபலி பூஜையை நிறுத்துமாறு சிலாபம் பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
 
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று பரிசீலித்த நீதவான் அதனை நிராகரித்தார். (ஒகஸ்டின் பெர்ணான்டோ)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .