2025 மே 23, வெள்ளிக்கிழமை

மது அருந்திய நால்வர் வைத்தியசாலையில்; வாரியபொல மதுபான நிலையத்துக்கு சீல்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரியபொல நகரில் அமைந்துள்ள மதுபான நிலையத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மதுபானத்தை அருந்திய நால்வர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி, வயிற்றுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தை அடுத்து மேற்படி மதுபான நிலையத்தைச் சேர்ந்த மதுபானங்களில் சில இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குருணாகல் கலால் திணைக்கள அலுவலகம் தெரிவித்தது.

அத்துடன், இரசாயன பகுப்பாய்வு அறிக்கை வரும் வரையில் மேற்படி மதுபான நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திணைக்கள அலுவலகம் குறிப்பிட்டது.

மேற்படி மதுபான நிலையமானது வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியொருவருக்கு சொந்தமானதென்பது குறிப்பிடத்தக்கது. (புஷ்பகுமார ஜயரத்ன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X