2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவும் அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பெற்றோரினால் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவும் பாடசாலையின் அலுவலகக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும், வருடாந்த பரிசளிப்பும் நேற்று வியாழக்கிழமை மாலை  நடைப்பெற்றன.

இப்பாடசாலையின் பெற்றோரினால் இரண்டாவது தடவையாக சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாடசாலைக்கான அலுவலக கட்டிடம் சுமார் 16 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கென நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான தாஹிர், ரியாஸ், கமறுதீன் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ், கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .