2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாகிஸ்தானிலிருந்து உயர்மட்ட கல்விமான் குழு புத்தளத்திற்கு வருகை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பல்கலைக்கழக உயர்மட்ட கல்விமான்களைக் கொண்ட குழு நேற்று சனிக்கிழமை புத்தளத்திற்கு வருகை தந்தனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற சமாதான சூழ்நிலையில் பாகிஸ்தான் - இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் கலை, கலாசார, வர்த்தக உறவுகளை  மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இவர்கள் இங்கு வருகை தந்தனர்.

புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸின் தலைமையில் புத்தளம் மக்களின் பிரதிநிதிகளினை புத்தளம் பொதுநூலகத்தில் சந்தித்த இக்குழுவினர் கலை, கலாசார, வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தலைமையிலான குழுவினரை கராச்சிக்கு  வருமாறு இக்குழுவினர் கோரினர்.

இக்குழுவினர் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

வடமேல் மாகாணசபை உறுப்பினர்கான எம்.ரியாஸ், என்.டி.எம்.தாஹிர், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .