2025 மே 23, வெள்ளிக்கிழமை

உப்பு விளையும் பகுதியில் பயிர்ச் செய்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் களப்பு பிரதேசத்திற்கு அண்மித்த பகுதிகளில் உப்பு உற்பத்தியும், இறால் வளர்ப்புமே பிரசித்தி பெற்றது.

இதற்கு விதிவிலக்காக புத்தளம், பெருக்குவட்டான் கிராமத்தில் களப்பினை அண்மித்த பகுதியில் கண்டல் தாவரங்கள் காணப்படுமிடத்தில் வேளாண்மை செய்கையினை அக்கிராம மக்கள் சிலர் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர்.

இப்பகுதியில் வேளாண்மை சிறப்பாக செய்யப்பட்டு சிறந்த அறுவடையினையும் இக்கிராம மக்கள் பெற்றுள்ளனர்.

தற்போது புத்தளம் மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியிலும் இக் கிராமத்தில் களப்பினை அண்மித்து காணப்படும் நீர் ஊற்றுக்களில் நீர் வற்றாமல தொடர்ந்து ஊற்றெடுத்துக்கொண்டிருப்பதினால் இவ் கிராம விவசாயிகள் கோடை காலத்திலும் வெற்றிகரமாக வேளாண்மை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X