2025 மே 23, வெள்ளிக்கிழமை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தினால் புத்தளம் மீனவர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து புத்தளம் களப்பினூடாக அநுராதபுரம் வரை செல்லும் மின்சார கம்பம் மூலம் புத்தளம் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை புத்தளம் கடற்கரை பகுதியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண மீன்பிடித்துறை, மின்சார, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமறுதீன், புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு மீனவர்களினால் குறித்த மின்சார கம்பங்கள் மூலம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அதிதிகளுக்கு தெளிவுப்படுத்தினர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரோரா, மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்தவிதமான செயற்திட்டங்களினை முன்னெடுக்க தாம் அனுமதிக்கப்போவதில்லை என உறுதியளித்தார்.

இங்கு உரையாற்றிய புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் குறித்த திட்டத்திற்கு எதிராக புத்தளம் நகர சபையிலும், புத்தளம் பிரதேச சபையிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் களப்பினூடாக முன்னெடுக்கும் குறித்த மின்சார திட்டத்தினை கல்லடியினூடாக வீதியினால் கொண்டு செல்ல எவ்வித தடையும் இல்லையெனவும் கூறினார்.

மாகாணசபை உறுப்பினர்கள் தாம் நிறைவேற்றிய குறித்த திட்டத்திற்கு எதிராக மாகண சபைக்கூட்டத்திலும் தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

குறித்த மின்சார திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இடத்தினையும் அதிதிகள் நேரடியாக சென்று பார்வையிட்டனர். இந்நிகழ்வில் புத்தளம் பிரதேசத்தில் வாழும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X