2025 மே 23, வெள்ளிக்கிழமை

'புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்' உருவாக்கம்

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி புதிய ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்று புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டது.

புத்தளம், சாஹிரா ஆரம்ப பாடசாலையில் ஒன்று கூடிய புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் 'புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்' என்ற அமைப்பினை உருவாக்கியதுடன் நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக எம்.எஸ்.எம்.முஸப்பிர், உப தலைவராக எம்.யு.சனூன், பொதுசெயலாளராக எம்.என்.எம்.ஹிஜாஸ், இணைச்செயலாளராக கே.மஹாதேவன், பொருளாளராக ஏ.எஸ்.எம்.புல்கி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நிர்வாகசபை உறுப்பினர்களாக எஸ்.ஆர்.எம்.முஹ்சி, எம்.ஏ.ஏ.காசிம், ஆர்.ரஸ்மின், ஏ.கே.ஐ.என்.டில்சாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தில் புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுடன் தொடர்புடைய அனைவரும் இவ் ஒன்றியத்தில் இணைந்து கொள்ளலாம்.

அங்கத்துவ படிவத்தினை 0714867076 அல்லது 0718413839 என்ற தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X