2025 மே 23, வெள்ளிக்கிழமை

விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்த ஓ.ஜே.பைசர் என்ற நபரே இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

புத்தளத்தைச் சேர்ந்த இந்நபர், தனது மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருக்கும் போது புத்தளம் மன்னார் வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கில் மோதியதில் படுகாயமடைந்தார்.

அத்துடன் குறித்த மாடு அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X