2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வடமத்திய மாகாணத்தில் 'ரண்பிம அருண' வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்  'ரண்பிம அருண' எனும் தலைப்பின் கீழ் நடமாடும் சேவைகளை முன்னெடுக்க புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அநுராதபுரம் மாவட்டத்தில் 22 'ரண்பிம அருண' நடமாடும் சேவைகள் நடத்தப்படவுள்ளன.

பிரதேச மக்களின் காணி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் ஜீவனோபாயப் பிரச்சினைகள், வீட்டுத் திட்டங்கள் உட்பட பல காரணங்களை தீர்த்து வைக்கும் நோக்கிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நடமாடும் சேவைகளுக்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கவீனமுற்றுள்ள பிள்ளைகளுக்கு உதவித் திட்டங்களை வழங்குதல், தகுதியானவர்களுக்கு வீடுகளை வழங்குதல் மற்றும் அதற்குத் தேவையான காணிகளை வழங்குதல், தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல், பிறப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்குதல், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளுக்காக சிறந்த வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியன இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோயினைத் தடுப்பதற்குத் தேவையான சிகிச்சைகள் மற்றும் மூலிகைத் தாவரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X