2025 மே 22, வியாழக்கிழமை

தெதுறு ஓயா பெருக்கெடுப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


தெதுறு ஓயா பெருக்கெடுத்துள்ளதினால் புத்தளம் மாவட்டத்தின் பங்கதெனிய, ஆராச்சிகட்டு, பத்துளுஓயா ஆகிய பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் - கொழும்பு வீதியில் உடப்பு சந்தி தொடக்கம் பங்கதெனிய வரை வீதியின் மேல் நீர் பாய்வதினால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புகையிரத பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதினால் இன்று கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையும் நடைப்பெறவில்லை.

இவ்வெள்ளப்பெருக்கு காரணமாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆராச்சிகட்டுவ பாடசாலையில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் பரீட்சை இடைநிறுத்தப்பட்டதாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X